தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாகவே நடைபெற்று வரும் தலித் மக்கள் மீதான ஆதிக்க சாதிய வெறியாட்டத்தின் பகுதியாக அண்மையில் நடைபெற்ற தருமபுரி மாவட்டம் – நத்தம், கொண்டம்பட்டி, அண்ணாநகர் தலித் கிராமம் மீதான திட்டமிட்ட காட்டு மிராண்டித் தாக்குதலுக்கு எதிராக தொடர் இயக்கத்தை தமிழக அளவில் மேற்கொள்ள வேண்டியுள்ளது. எனவே, சாதி ஒழிப்பு போராட்டத்தில் முன் நிற்கும் அனைத்து சக்திகளும் ஓரணியில் திரள வேண்டிய அவசியமுள்ளது. இதையொட்டி பரந்த கூட்டமைப்பை உறுவாக்குவதற்கான ஒரு ஆலோசனைக் கூட்டம் 18.11.2012 அன்று தோழர் கோவை ஈஸ்வரன் தலைமையில் சென்னையில் நடந்தது. அதில் இருபத்தி ஐந்திற்கும் மேற்பட்ட அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் கலந்து கொண்டனர்.
தலித் அமைப்புகள், புரட்சிகர அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் இக்கூட்டியக்கத்தில் ஒன்றிணைந்துள்ளனர்.
தொடர்புக்கு: saek.tamilnadu@gmail.com
ஒருங்கிணைப்பாளர்கள் குழு:
1. கி. பழனி – மக்கள் சனநாயக குடியரசு கட்சி – 9176264717 (ஒருங்கிணைப்பாளர்)
2. தி. மோகன் – 984069511
3. கோ. நீலமேகம் – புரட்சியாளர் அம்பேத்கார் விழிப்புணர்வு பாசறை – 9710015123
4. கொற்றவை – மாசெஸ் – kotravaiwrites@gmail.com
5. அரங்க குணசேகரன் – தமிழக மக்கள் புரட்சி கழகம் – 9047521117
6. பி.சி சண்முகசுந்தரம் – சி.பி.ஐ (எம்.எல்) – 971077547
7. சாலமன் – இந்திய மக்கள் முன்னணி – 9444539376
அனைத்து உழைக்கும் மக்கள், தலித் அமைப்புகள், புரட்சிகர அமைப்புகள், சாதி மறுப்பாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் இக்கூட்டியக்கத்தில் இணையலாம்.