Tag Archives: அண்ணா நகர்

தொடர் உண்ணாநிலை அறப்போராட்டம்

நத்தம் காலனி, அண்ணாநகர், கொண்டம்பட்டி கிராம தலித் மக்கள் மீதான தாக்குதலுக்கு முறையான நீதியும், நிவாரணமும் வழங்க வலியுறுத்தி அந்த கிராம மக்கல் தொடர் உண்ணாநிலை அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஆதிக்க சாதி வெறி தாக்குதல்களையும், கொள்ளைகளையும் ஜெ தலைமையிலான தமிழக அரசு இதுவரை கண்டிக்கவில்லை, எந்த அமைச்சரும் இதுவரை மக்களை சந்தித்து ஆறுதல் கூறவும் இல்லை. நிவாரணக் குழு கூட அமைக்கப்பட்டதாக தெரியவில்லை.

அரசு மௌனம் காத்துவரும் வேளையில் தொடர் உண்ணாநிலை போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அதில் பங்கு கொள்வது ஒவ்வொரு தலித் இயக்கங்கள், முற்போக்கு இயக்கங்கள், புரட்சிகர அமைப்புகள், கட்சிகள் மற்றும் சமூக அர்வலர்களின் கடமை.

ஒவ்வொரு அமைப்பின் சார்பாகவும், ஜனநாயக சக்திகளாகவும் தினம் தினம் நூற்றுக் கணக்கானோர் இந்த தொடர் உண்ணாநிலை அறப்போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு சாதி ஆதிக்க எதிர்ப்பு கூட்டியக்கம் கேட்டுக்கொள்கிறது.

அம்மக்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கை இணைக்கப்பட்டுள்ளது.

 

image001

image002

சாதி ஆதிக்க எதிர்ப்பு கூட்டியக்கம் நடத்தும் ஆர்பாட்டம்

கூட்டியக்கத்தில் இணைந்துள்ளவர்கள் பட்டியலில்:

மாற்றத்திற்கான செய்தியாளர்கள், சென்னை

அ. வெற்றிவேல், சவுதி அரேபியா

திருத்தம்: கொற்றவை, மாசெஸ் (Movement Against Sexual Exploitation and Sexism)

ஆர்பாட்ட தேதி அறிவிப்பு

தர்மபுரி தலித் கிராமங்கள் மீதான ஆதிக்க சாதி வெறியாட்டத்திற்கு எதிராக சாதி ஆதிக்க எதிர்ப்பு கூட்டியக்கம் நடத்தும் ஆர்பாட்டம்:

தர்மபுரி தலித் கிராமங்கள் மீதான ஆதிக்க சாதி வெறியாட்டத்திற்கு எதிராக சாதி ஆதிக்க எதிர்ப்பு கூட்டியக்கம் நடத்தும் ஆர்பாட்டம்:

நாள்: நவம்பர் 30,2012

இடம்: மெமோரியல் ஹால்

நேரம்: மாலை 4 முதல் 6 மணி

அனைத்து உழைக்கும் மக்களே! சாதி மறுப்பாளர்களே! சாதி வெறியாட்டத்திற்கு எதிராக அணி திரள்வோம்.

 

தர்மபுரி தலித் கிராமங்கள் மீதான ஆதிக்க சாதி வெறியாட்டத்திற்கு எதிராக அணிதிரள்வோம் !

saek/TN/02/2012

தர்மபுரி தலித் கிராமங்கள் மீதான ஆதிக்க சாதி வெறியாட்டத்திற்கு எதிராக அணிதிரள்வோம் !

*  தமிழக அரசே!

  • நத்தம், கொண்டம்பட்டி, அண்ணாநகர் தலித் கிராமங்கள் மீதான தாக்குதலுக்கு காரணமான சாதி வெறியர்களின் சொத்துக்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக வழங்கு.
  • இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக சாதி மறுப்புத் திருமணத்தை எதிர்க்கும், சாதி வெறியைத் தூண்டும் பாட்டாளி மக்கள் கட்சி, கொங்கு வேளாளர் பேரவை, மூவேந்தர் முன்னேற்றக் கழகம் போன்ற கட்சிகளை, அமைப்புகளை தடை செய்.

*  தமிழக மக்களே!

  • அரசின் ஆதிக்க சாதி கூட்டிற்கு எதிராகவும் தர்மபுரி சாதி வெறி ஆட்டத்திற்கு துணை நின்ற உளவுத் துறை – காவல் துறை நடவடிக்கைகளுக்கு எதிராகவும் அணி திரள்வோம்.
  • அனைத்து உழைக்கும் மக்களே! சாதி மறுப்பாளர்களே! சாதி வெறியாட்டத்திற்கு எதிராக அணி திரள்வோம்

இவண்,

சாதி ஆதிக்க எதிர்ப்பு கூட்டியக்கம், தமிழ்நாடு

தொடர்புக்கு – jmacd.tamilnadu@gmail.com

கி. பழனி – மக்கள் சனநாயக குடியரசு கட்சி – 9176264717, ஒருங்கிணைப்பாளர்

ஒருங்கிணைப்பாளர்கள் குழு:

1.     கி. பழனி – மக்கள் சனநாயக குடியரசு கட்சி – 9176264717

2.     தி. மோகன் – 984069511

3.     கோ. நீலமேகம் – புரட்சியாளர் அம்பேத்கார் விழிப்புணர்வு பாசறை – 9710015123

4.     கொற்றவை – மாசெஸ் – kotravaiwrites@gmail.com

5.     அரங்க குணசேகரன் – தமிழக மக்கள் புரட்சி கழகம் – 9047521117

6.     பி.சி சண்முகசுந்தரம் – சி.பி.ஐ (எம்.எல்) – 971077547

7.     சாலமன் – இந்திய மக்கள் முன்னணி – 9444539376

தொடர்புடைய சுட்டிகள்

http://www.thehindu.com/news/states/tamil-nadu/dharmapuri-incident-serious-hc/article4082173.ece

http://articles.timesofindia.indiatimes.com/2012-11-08/coimbatore/34993610_1_dalit-boy-dalit-houses-caste-violence

http://thealternative.in/inclusivity/dharmpuris-caset-blackened-walls/

http://newindianexpress.com/states/tamil_nadu/article1342654.ece

http://www.firstpost.com/politics/dharmapuri-violence-why-dalits-are-unsafe-in-dravidian-tamil-nadu-522135.html

http://tamil.oneindia.in/news/2012/11/12/tamilnadu-dharmapuri-inspector-suspended-making-night-rounds-164561.html

http://amarx.org/?p=666

பதிவிட்டவர்: கொற்றவை

சாதி ஆதிக்க எதிர்ப்பு கூட்டியக்கம், தமிழ் நாடு


Image

saek/TN/01/2012

தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாகவே நடைபெற்று வரும் தலித் மக்கள் மீதான ஆதிக்க சாதிய வெறியாட்டத்தின் பகுதியாக அண்மையில் நடைபெற்ற தருமபுரி மாவட்டம் – நத்தம், கொண்டம்பட்டி, அண்ணாநகர் தலித் கிராமம் மீதான திட்டமிட்ட காட்டு மிராண்டித் தாக்குதலுக்கு எதிராக தொடர் இயக்கத்தை தமிழக அளவில் மேற்கொள்ள வேண்டியுள்ளது. எனவே, சாதி ஒழிப்பு போராட்டத்தில் முன் நிற்கும் அனைத்து சக்திகளும் ஓரணியில் திரள வேண்டிய அவசியமுள்ளது. இதையொட்டி பரந்த கூட்டமைப்பை உறுவாக்குவதற்கான ஒரு ஆலோசனைக் கூட்டம் 18.11.2012 அன்று தோழர் கோவை ஈஸ்வரன் தலைமையில் சென்னையில் நடந்தது. அதில் இருபத்தி ஐந்திற்கும் மேற்பட்ட அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் இறுதியில் இந்த கூட்டு இயக்கத்திற்கு ’சாதி ஆதிக்க எதிர்ப்பு கூட்டியக்கம்’, தமிழ்நாடு என்று ஒருமித்த ஆதரவோடு பெயர் முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டமைப்பிற்கான ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்களை தேர்வு செய்யும்படி தோழர்கள், தோழர் கோவை ஈஸ்வரனை பணிந்தனர். தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர் குழு உறுப்பினர்களின் பெயர்கள் பின்வருமாறு:

 1.     கி. பழனி மக்கள் சனநாயக குடியரசு கட்சி (ஒருங்கிணைப்பாளர்)

2.     தி. மோகன்

3.     கோ. நீலமேகம் புரட்சியாளர் அம்பேத்கார் விழிப்புணர்வு பாசறை

4.     கொற்றவை மாசெஸ்

5.     அரங்க குணசேகரன் தமிழக மக்கள் புரட்சி கழகம்

6.     பி.சி சண்முகசுந்தரம் சி.பி.ஐ (எம்.எல்)

7.     சாலமன் இந்திய மக்கள் முன்னணி

தர்மபுரி சாதி வெறியாட்டத்திற்கு எதிரான போராட்டங்களை சென்னை மற்றும் தர்மபுரியில் முன்னெடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும், தொடர் சாதி ஒழிப்பு பணிகளை முன்னெடுப்பதற்கான ஒரு கூட்டமைப்பாகநடைமுறை ஆய்வுகளுக்குட்பட்டு இக்கூட்டு இயக்கத்தை கொண்டுசெல்லுதல் என்றும் முடிவு செய்யப்பட்டது. ஆதிக்க சாதி வெறியாட்டத்திற்கு எதிராக நடக்கவிருக்கும் ஆர்பாட்டங்களில் வைக்கப்பட வேண்டிய முழக்கங்கள், கோரிக்கைகள் முடிவு செய்யப்பட்டது.  கூட்டியக்க ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள் 19.11.2012 மாலை 4 மணிக்கு கூடி ஆர்பாட்ட நிகழ்வுக்கான திட்டமிடுதல்களை தொடர்வது என்று முடிவு செய்யப்பட்டு அன்றைய கூட்டம் நிறைவு பெற்றது.

அனைத்து உழைக்கும் மக்கள், தலித் அமைப்புகள், புரட்சிகர அமைப்புகள், சாதி மறுப்பாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் இக்கூட்டியக்கத்தில் இணையலாம்.

தொடர்புக்கு saek.tamilnadu@gmail.com

 

பதிவிட்டவர்: கொற்றவை

saek/TN/01/2012