Tag Archives: சாதிய வன்கொடுமை

சாதிய வன்முறைக்கு எதிரான தமிழ்ச் சமூகத்தின் கூட்டறிக்கை

அன்புடையீர், வணக்கம். இத்துடன் ‘சாதிய வன்முறைக்கு எதிரான தமிழ்ச் சமூகத்தின் கூட்டறிக்கை’ தங்களுக்கு அனுப்பி வைக்கபடுகிறது. எங்கள் வேண்டுகோளை ஏற்று இந்த அறிக்கையில் கையெழுத்திட்ட அனைவருக்கும் என் நன்றி.

தோழமையுடன்

கண.குறிஞ்சி.

தமிழ்ச்சமூகத்திற்கு ஒரு பணிவான வேண்டுகோள்!

‘சாதி மிகுந்த அதிகாரத்தோடு இருப்பது இந்தியாவில்தான். சாதி இவ்வளவு தூரம் ஆதிக்கம் செலுத்துவதற்குக் காரணம், அதற்கு மத அங்கீகாரம் இருப்பதுதான்” எனக் குறிப்பிட்டார் புகழ்பெற்ற வரலாற்றறிஞர் தாயின்பீ. மனுசாஸ்திரமும், வருணாசிரம தர்மமும் இந்து மதத்தில் சாதி அமைப்பைத் தாங்கிப் பிடிக்கும் அடித்தளங்களாக உள்ளன. அதனால்தான் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகியும் சாதியை ஒழிக்க முடியவில்லை. மனிதகுல வரலாறு வளரவளர, சாதி அமைப்பும் தன்னை நுணுக்கமாகப் புதிப்பித்து கொண்டே வந்துள்ளது.

இந்தியத் துணைக்கண்டத்தில் பூலே, அம்பேத்கர், பெரியார் போன்றோர் வீரியமிக்க, விடாப்பிடியான போரைக் கட்டவிழ்த்து விட்ட காரணத்தால், சாதியின் மேலாதிக்கம் சற்றே குறைந்திருந்தது. ஆனால் அண்மைக் காலத்தில் தமிழகத்தில் சாதிவெறி தன் கோரமுகத்தை மீண்டும் தீவிரமாகக் காட்டத் தொடங்கியுள்ளது.

தன் சாதிப் பெண்களைத் திருமணம் செய்யும் பிற சாதியினரை வெட்ட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டிகுரு தோள் தட்டுகிறார். கொங்கு வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த ‘திடீர்’ தலைவர் மணிகண்டன் என்ற நபர், சாதிமறுப்புத் திருமண எதிர்ப்பு உறுதிமொழி எடுக்கச் சொல்வதோடு, கொங்கு வேளாளர் சமுதாயப் பெண்களுக்குச் சொத்துரிமையே கூடாது எனக் கூக்குரலிடுகிறார். அதே போல், ‘பிராமணாள் கபே’, தேவர்பேரவையினர் போன்றோரும் தத்தம் சாதிப்பெருமிதத்தில் ஊன்றி நிற்கின்றனர்.

தாங்கள் ஆண்ட பரம்பரையைச் சேர்ந்தவர்கள் எனப் பெருமைப்பட்டுக் கொள்ளாத சாதியே தமிழ்நாட்டில் இல்லை. இந்தப் பின்னணியில்தான் அண்மையில் ‘தலித்’ இளவரசன், வன்னியர் இனத்தைச் சார்ந்த திவ்யாவைக் காதல் திருமணம் செய்து கொண்டதால், சாதிக்கு இழுக்கு நேர்ந்ததாக 2012 நவம்பர் 7 ஆம் நாள் தலித்துகள் வாழும் நாய்க்கன்கொட்டாயை ஒட்டிய பகுதிகளை எரித்துச் சாம்பலாக்கினர் வன்னிய இனத்தவர்.

தமிழகத்தில் இத்தகைய தீண்டாமைக் கொடுமை பல்லாண்டுகளாகப் பல்வேறு வடிவங்களில் தங்குதடையின்றி நடைபெற்று வருகிறது. சாதி இந்துக்கள் உள்ள பகுதியில் செருப்புப் போட்டுக் கொண்டு தலித்துகள் நடக்கக் கூடாது; மிதி வண்டியில் செல்லக்கூடாது; தலித் சத்துணவுப் பணியாளர் சமைத்த உணவைப் பிற சாதிக் குழந்தைகள் உண்ணக்கூடாது; பள்ளியிலும் , சமூகத்திலும் இரட்டைக்குவளை முறை; தலித் குழந்தைகள் பிறசாதிக் குழந்தைகளோடு பள்ளி ஆண்டு இறுதியில் ஒன்றாக நிழற்படம் எடுக்கக் கூடாது. மாறாகத் தலித் குழந்தைகள் மட்டும் தனியே படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற நடைமுறை; தலித்துகள் நாய் அதிலும் குறிப்பாக ஆண்நாய் வளர்க்கக் கூடாது, தலித் ஊராட்சித் தலைவர்கள் இருக்கையில் அமரக்கூடாது; கொடியேற்றக் கூடாது; தலித்துகள் ஆலயத்திற்குள் நுழையக் கூடாது; அவர்கள் செத்தபிறகும் தனிச் சுடுகாட்டில்தான் புதைக்க வேண்டும் எனத் தினுசு தினுசாக தீண்டாமைக் கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. இவற்றிற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல, திண்ணியத்தில் தலித்துகளை மனிதமலம் தின்ன வைத்த கொடுமை, கற்பனைக்கும் எட்டாத அயோக்கியத்தனம் ஆகும்.

இருபத்தியோராம் நூற்றாண்டில் இப்படி எல்லாம் நடப்பதைச் சிலர் நம்பக்கூட மறுக்கலாம். ஆனால் தருமபுரி நிகழ்ச்சி, அவர்களுக்கெல்லாம் ஒரு பாடமாகும். திவ்யா-இளவரசன் திருமணத்தைச் சாக்கிட்டு, காதல் திருமணத்தையும், சாதிமறுப்புத் திருமணத்தையும் கிண்டலும், கேலியும் செய்யும் அறிக்கைகள் வெளியாகின்றன. தலித்துகள் நாகரிகமாக உடை அணிவதைக்கூட உள்நோக்கத்தோடு நக்கலிடும் போக்கு, பெரும் அதிர்ச்சியை உண்டாக்குகிறது.

காதல் திருமணங்கள் தோல்வி அடைந்து விட்டன என்பதை மெய்ப்பிக்கப் பொய்யான புள்ளி விவரங்கள் அள்ளி வீசப்படுகின்றன. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி மக்களுக்கு எதிராக நடத்தப்படும் பல குற்றச் செயல்கள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படுவதில்லை. காவல் துறையிலுள்ள சாதிய மேலாதிக்க சக்திகள் வேண்டுமென்றே சாதாரண சட்டப்பிரிவுகளின் கீழ் பதிவு செய்கின்றன. அப்படியே உரிய சட்டபிரிவுகளின் கீழ் பதிவு செய்தாலும், சரியான சாட்சியங்களை முன் நிறுத்துவதில்லை; தக்க முறையில் வாதாடுவதும் இல்லை. அரசின் இத்தகைய அலட்சியப் போக்கின் காரணமாகத்தான் இச்சட்டத்தை இன்னும் வலுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தவிரவும் ‘தமிழக்காவல் நிலையங்களில் கடந்த பல ஆண்டுகளாக 2,092 வன்கொடுமை வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த 336 வன்கொடுமை சம்பவங்களில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த 18 பெண்கள் உள்ளிட்ட 44 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் நீதி மன்றங்களில் 3,568 வன்கொடுமை வழக்குகள் நடைபெற்று வருகின்றன. இவற்றில் 1,020 வழக்குகளில் மட்டுமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. (தீக்கதிர்4/12/2012) உண்மை நிலவரம் இவ்வாறிருக்க இதை மூடி மறைக்கும், திசை திருப்பும் வேலைகள்தான் வேகமாக நடைபெற்று வருகின்றன. ஒரு திருமணம் தோல்வி அடைய சாதி வேறுபாடு தவிர வேறு எவ்வளவோ காரணங்கள் உள்ளன. பெற்றோர் பார்த்து ஒரே சாதியில் செய்யப்படும் திருமணங்களின் தோல்வி விகிதம் இதைவிடப் பல மடங்கு இருப்பதைப் பலரும் அறிவர்.

இவற்றையெல்லாம் வசதியாக மறைத்து விட்டு, தலித்துகள் வசிக்கும் பகுதியில் பெண்கள் நடமாட முடியவில்லை; படிக்கும் பெண்களை தலித் இளைஞர்கள் ஈவ்டீசிங் செய்வதால், பெண்களின் படிப்புப் பாதியிலேயே நின்று விடுகிறது’. என்றெல்லாம் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர்.இராமதாஸ் சொல்வது எந்த அளவு ஒப்புக் கொள்ளத் தக்கது என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.

திவ்யா-இளவரசன் உள்ளிட்ட சாதி மறுப்புத் திருமணங்களிலுள்ள மற்றொரு செய்தியும் குறிப்பிடத்தக்கதாகும். ஆண் உயர்சாதியாகவும், பெண் தாழ்ந்த சாதியாகவும் இருந்தால் ஏவப்படும் வன்முறையை விட, ஆண் தாழ்ந்த சாதியாகவும், பெண் உயர்ந்த சாதியாகவும் இருந்தால் ஏவப்படும் வன்முறை அதிகமாக இருக்கிறது. அதிலும் ஆண், பெண் இவர்களில் யாரேனும் ஒருவர் தலித்தாக இருந்துவிட்டால் வன்முறையின் வீரியம் பன்மடங்காக இருக்கும். பெண், சாதீய மேலாண்மையின் குறியீடாக இருக்கிறாள். மேலும் அவளது சொத்துரிமை, ஆணாதிக்கத்திற்கு ஒரு சவாலாக இருக்கிறது. எனவே சாதிப்பெருமை, சொத்து என இரண்டையும் ஒருங்கே இழக்க சாதீயமும் விரும்புவதில்லை; ஆணாதிக்கமும் விரும்புவதில்லை. எனவேதான் தாக்குதலின் தீவிரம் அதிகரிக்கிறது.

அதேபோல், ‘தீண்டாமை ஒழிப்பு ‘ என்பதை மட்டும் தனியே வலியுறுத்துவது முழுமையான சீர்திருத்தம் ஆகாது. ஒட்டுமொத்த சாதிஒழிப்புதான் தீண்டாமையை நிரந்தரமாக நீக்கக்கூடியது. எனவே தீண்டாமை ஒழிப்பும், சாதி ஒழிப்பும் ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரிக்க முடியாத அளவு இயங்கியல் உறவு கொண்டவையாக உள்ளன.

தலித் தலித் அல்லாதோருக்கு இடையிலான மோதலில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் ஒரு கவசமாக இருந்து காத்து வருகிறது. எனவே இச்சட்டம் நீர்த்துப் போய்விடாமல், இன்னும்வலிமையானதாக மாற்றப்பட வேண்டும். அதே சமயம் இச்சட்டம் தவறான முறையில் பயன்படுத்தப்படாமல் தடுப்பதற்கு உரிய கண்காணிப்பு முறைகளையும் நடைமுறைப்படுத்த வேண்டும். இந்தச் சூழலில்தான் காதல் திருமணம் சாதி மறுப்புத் திருமணம் ஆகியவற்றுக்கு ஆதரவாகவும், பெண்களின் சொத்துரிமை பறிக்கப்படுவதற்கு எதிராகவும், தர்மபுரி சாதிவெறியாட்டத்திற்குத் துணை போனவர்களைக் கைது செய்ய வலியுறுத்தியும் தமிழ்ச்சமூகத்தின் சனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டியுள்ளது. சாதீயவாதிகளின் கூட்டணிக்கு மாற்று, சனநாயக சக்திகளின் ஒற்றுமையே ஆகும். அத்தகையோர் ஒற்றுமைய நாம் உயர்த்திப் பிடிப்போம்.

* காதல் திருமணங்கள் , சாதி மறுப்புத் திருமணங்களை ஆதரிப்போம்!
* பெண்களின் சொத்துரிமையைப் பறிக்கும் முயற்சிகளை முறியடிப்போம்!
* தர்மபுரி சாதிவெறி வன்முறையில் ஈடுபட்டவர்கள் அனைவர் மீதும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989 பிரிவுகள் 3 (2 ) (3), 3(2)(4), 3(2)(5) போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உடனடியாகக் கைது செய்ய வேண்டும்!
* அரசியல் சாசன சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட சாதி மறுப்புத் திருமணங்களுக்கு எதிராகப் பேசி, தாழ்த்தப்பட்டோர் மீதான வன்முறைகளைத் தூண்டும் வகையில் கூட்டங்கள் நடத்துவோர்களை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.

மேற்காணும் கோரிக்கைகளைக் கீழ்க்காணும் நாங்கள் ஆதரிக்கிறோம்; வழி மொழிகிறோம்!

பெயர்கள் அகரவரிசைப்படி:

அமரந்தா                                       (  இலத்தீன் அமெரிக்க நட்புறவுக் கழகம்  )

அ.மார்க்ஸ்                                  (  பேராசிரியர், மனித உரிமை ஆர்வலர்  )

அகரம் சதீஷ்                               (  மானமும் அறிவும் வலை  )

அதியமான்                                   (  ஆதித்தமிழர் பேரவை  )

அமுதன்                                         (  ஆவணப்பட இயக்குனர்  )

அய்யப்ப மாதவன்                      (   கவிஞர்   )

அரங்க.குணசேகரன்                  (  தமிழக மக்கள் புரட்சிக் கழகம்  )

அரிமா தோழர்                               (  சுதேசி இயக்கம்  )

அருண் சோரி                                (  தமிழ்நாடு மக்கள் கட்சி  )

அருள் எழிலன்                              (  பத்திரிக்கையாளர்  )

அழகிய பெரியவன்                      (  எழுத்தாளர்  )

அறிவன்                                            (  இலக்கிய விமர்சகர்  )

அன்பாதவன்                                   (   கவிஞர்   )

அன்வர் பாலசிங்கம்                    (  எழுத்தாளர்  )

ஆ.சிவசுப்ரமணியன்                   (  சமூக ஆய்வாளர்  )

ஆதி வள்ளியப்பன்                        (  பூவுலகின் நண்பர்கள்)

ஆர்.ஆர்.சீனிவாசன்                      (  ஆவணப்பட இயக்குனர்  )

ஆளூர் ஷாநவாஸ்                        (  ஆவணப்பட இயக்குனர்  )

இரா.முருகவேள்                            (  மொழிபெயர்ப்பாளர்  )

இராசேந்திர சோழன்                     (  எழுத்தாளர், மண்மொழி இதழ் ஆசிரியர்  )

இறையரசன்                                     (  பேராசிரியர், தமிழர் நல உரிமை இயக்கம்  )

இ.சி.ராமச்சந்திரன்                         (   பார்வை பண்பாட்டு இயக்கம்   )

எவிடென்ஸ் கதிர்                          (  சமூக செயற்பாட்டாளர்  )

என்.ஜி.சுகுமாரன்                            (  சமூக ஆர்வலர்  )

எஸ்.என்.நாகராசன்                        (  மூத்த மார்க்சிய அறிஞர்  )

எஸ்.ராமலிங்கம்                              (  அயோத்திதாசர் ஆய்வு நடுவம்  )

எஸ்.வி.உதயகுமார்                        (  மேலாண்மை ஆலோசகர்  )

க.அருணபாரதி                                  (  தமிழ்த் தேச பொதுவுடைமைக் கட்சி  )

கணியன் பாலன்                                (  தமிழீழ இனப்படுகொலைக்கு எதிரான மக்கள் இயக்கம்  )

கதிரவன்                                               (  தமிழர் நட்பு கழகம்,   மும்பை  )

கந்தையா                                             (  மலையக தமிழர் இயக்கம்  )

கருப்பசாமி                                          (  தமிழ்த் தேச தொழில் முனைவோர் கூட்டமைப்பு  )

பாலா                                                      (   கார்ட்டூனிஸ்ட்   )

கி.வெ.பொன்னையன்                     (  தற்சார்பு விவசாயிகள் சங்கம்  )

கிறிஸ்டினா சாமி                               (  ஆம் ஆத்மி கட்சி  )

குட்டி ரேவதி                                         (   கவிஞர்   )

குமணன்                                                 (   தொழிலாளி    இதழ்ஆசிரியர்   )

கே.ஜி.சம்பத்குமார்                             (  மென்பொருள் தொழிலதிபர்  )

கொளத்தூர் மணி                                (  திராவிடர் விடுதலைக் கழகம்  )

கோ.சுகுமாரன்                                      (  மக்கள் உரிமை கூட்டமைப்பு  )

கோச்சடை                                              (  பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர்  )

கோசின்ரா                                                (   கவிஞர்   )

கோவை கு.ராமகிருட்டிணன்           (  தந்தை பெரியார் திராவிடர் கழகம்  )

கோவை ஞானி                                       (  தமிழ் நேயம்  இதழ் ஆசிரியர்  )

ச.பாலமுருகன்                                       (  மக்கள் சிவில் உரிமைக் கழகம்  )

சக்குபாய்                                                    (  பேராசிரியர் – பெரியாரியலாளர்  )

சங்கரநாராயணன்                                    (  லோஹியா அகாடமி,   ஒரிசா  )

சந்திரபோஸ்                                              (  தியாகி இம்மானுவேல் பேரவை  )

சம்பத்குமார்                                               (   தொழில் அதிபர்   )

சி.மகேந்திரன்                                            (  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  )

சி.ராசன்                                                        (  கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம்,    பெங்களூரு  )

சி.ஜே.ராஜன்                                                (  மனித உரிமைகளுக்கான குடிமக்கள் இயக்க )

சிதம்பரன்.கி.                                              (  வழக்கறிஞர்  )

சுப.வீரபாண்டியன்                                    (  திராவிட இயக்கத் தமிழர் பேரவை  )

சுப்ரபாரதிமணியன்                                  (  எழுத்தாளர், கனவு இதழ் ஆசிரியர்  )

செங்கோட்டையன்                                  (   தலித் விடுதலைக் கட்சி   )

செந்தலை கவுதமன்                               (  சூலூர் பாவேந்தர் பேரவை  )

செந்தில்                                                        (  சேவ் தமிழ்ஸ் இயக்கம்  )

செந்தில்நாதன்                                           (  ஆழி பதிப்பகம்  )

செல்வமணியன்                                       (  தமிழ்நாடு பொதுவுடைமைக் கட்சி  )

செல்வராஜ் முருகையன்                      (  மனித உரிமை  ஆர்வலர்  )

டேவிட் அமலநாதன்                               (  தமிழ் சமூக கல்வி இயக்கம்  )

தங்கராஜ்                                                      (   வழக்கறிஞர்   )

தமிழ் வேங்கை                                          (  ஐந்திணை பாதுகாப்பு இயக்கம்  )

தமிழகன்                                                      (  நதிகள் பாதுகாப்பு இயக்கம்  )

தமிழச்சி தங்கபாண்டியன்                   (   கவிஞர்   )

தமிழ்நாடன்                                                (   கவிஞர்   )

தமிழழகன்                                                  (  உழைக்கும் மக்கள் குடியரசு    இதழ்ஆசிரியர்  )

தமிழேந்தி                                                   (   கவிஞர்   )

தாமரை                                                        (   கவிஞர்   )

தி.க.சி.                                                           (  மூத்த எழுத்தாளர்  )

தியாகு                                                          (   தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்   )

திருநாவுக்கரசு                                          (  தாளாண்மை  உழவர் இயக்கம்  )

திருநாவுக்கரசு                                          (  நிழல்     இதழ்ஆசிரியர்  )

திருமுருகன் காந்தி                                (  மே பதினேழு இயக்கம்  )

துரை சிங்கவேல்                                      (  மக்கள் ஜனநாயக குடியரசுக் கட்சி  )

தேவிபாரதி                                                  (   எழுத்தாளர்  )

தொ.பரமசிவன்                                         (  சமூக ஆய்வாளர்  )

நாடோடி தமிழன்                                       (  சமூக ஆர்வலர்,    மும்பை  )

நிழல்வண்ணன்                                          (   மொழிபெயர்ப்பாளர்   )

நீலவேந்தன்                                                 (  ஆதித்தமிழர் பேரவை  )

நெடுஞ்செழியன்                                         (  பேராசிரியர்  )

ப.பா.மோகன்                                                (  மூத்த வழக்கறிஞர்  )

பரந்தாமன்                                                      (  தமிழர் தேசிய இயக்கம்  )

பன்னீர் செல்வம்                                          (   பொறியாளர்   )

பா.செயப்பிரகாசம்                                      (   எழுத்தாளர்  )

பாமரன்                                                            (  எழுத்தாளர்  )

பானுமதி                                                         (  வழக்கறிஞர், மனித உரிமை மக்கள் கழகம்  )

பி.டி.சண்முகசுந்தரம்                                 (  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி– மார்க்சிஸ்ட் லெனிஸ்ட்  )

பிரபா.கல்விமணி                                         (  மக்கள் கல்வி இயக்கம்  )

பிரிட்டோ                                                         (  மனித உரிமையாளர்  ,)

பிரேம்                                                                (   எழுத்தாளர்   )

புவியரசு                                                           (   கவிஞர்   )

பூங்குழலி                                                        (  சமூக செயற்பாட்டாளர்  )

பெ.மணியரசன்                                           (  தமிழ்த் தேச பொதுவுடைமைக் கட்சி  )

பெருமாள் முருகன்                                   (  எழுத்தாளர்  )

பொதியவெற்பன                                         (  எழுத்தாளர்  )

பொள்ளாச்சி நசன்                                       (  தமிழம் வலை  )

பொன்.சந்திரன்                                              (  மக்கள் சிவில் உரிமைக் கழகம்  )

பொன்னீலன்                                                   (  அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்க)

மதிவண்ணன்                                                (  தமிழ்நாடு சாக்கிய அருந்தியர் சங்கம்  )

மாலதி மைத்ரி                                              (   கவிஞர்  )

மீ.த.பாண்டியன்                                            (  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (ம.லெ. மக்கள் விடுதலை  )

முகம்மது அலி                                             (காட்டுயிர்   இதழ் ஆசிரியர்)

மோகன்ராசு                                                   (   தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்  )

யமுனா ராஜேந்திரன்                                 (எழுத்தாளர்,    இலண்டன்)

ராசாமணி                                                       (   குறுஞ்செய்தி வட்டம்,     KSV  )

ராம்குமார்                                                     (   பொதுநல மாணவர் எழுச்சி இயக்கம்  )

லெனா.குமார்                                              (   யாதுமாகி பதிப்பகம்   )

வளர்மதி                                                        (   எழுத்தாளர்   )

வாலாசா வல்லவன்                                 (   பெரியாரியலாளர்  )

விடுதலை இராசேந்திரன்                       (  திராவிடர் விடுதலைக் கழகம்  )

விஜயகுமார்                                               (  சமூக ஆர்வலர்  )

வீரபாகு                                                        (  மனித உரிமை ஆர்வலர்  )

வேலிறையன்                                          (  சமூக நீதித் தமிழ்த் தேசம்    இதழ்ஆசிரியர்  )

ஶ்ரீதர்                                                       (   விழித்தெழு இயக்கம்,    மும்பை  )

ஹென்றி டிபேன்                                     (   மக்கள் கண்காணிப்பகம்  )
ஒருங்கிணைப்பு:

கண.குறிஞ்சி                                        (   மக்கள் நல்வாழ்வு இயக்கம்   )

புகழேந்தி தங்கராஜ்                           (   திரைப்பட இயக்குனர்  )

அ.விஸ்வநாதன்                                (   தொழில் முனைவோர் கூட்டமைப்பு  )

கீற்று நந்தன்                                         (   கீற்று இணைய ஆசிரியர்   )

 

பெண்களுக்கெதிரான சாதிய ஒடுக்குமுறை – கொற்றவை, மாசெஸ்

நத்தம், கொண்டம்பட்டி, அண்ணாநகர் தலித் கிராமங்களில் நடந்திருக்கும் ஆதிக்க வெறியாட்டத்தில் சாதிப் பிரச்சனை இருக்கிற்தா – இருக்கிறது; வர்க்கப் பிரச்சனை இருக்கிறதா – இருக்கிரது; இவைகளோடு மற்றுமொரு முக்கியப் பிரச்சனை ஒன்றிருக்கிறது – அதுதான் பெண் உரிமை பிரச்சனை. (The question of women’s rights). நிலப்பிரபுத்துவ அமைப்பானது உழைப்பைச் சுரண்ட அடிமைக் கட்டமைப்புகளை உருவாக்கியது, சத்ரிய பார்ப்பனியக் கூட்டு அதை மனுதர்மச் சட்டமாக்கியது. அந்த சட்டங்களைப் பெண்ணின் கருப்பையில் திணித்தது. சாதிய பற்றாளர்கள், சாதியக் கட்சிகள் இந்த ஆணாதிக்க பார்ப்பனிய இந்துத்துவ சாதியச் சட்டங்களை தங்கள் பொருளாதார, சமூக, அரசியல் அதிகார ஆதாயக் காரணிகளுக்காக அப்படியே பிடித்துக் கொள்கின்றனர். நடைமுறைப்படுத்துகின்றனர்.

பெரியார் இருந்திருந்தால் இந்த சாதிச் சங்கங்கள், அரசியல் கட்சிகள் இவ்வளவு தைரியமாக சாதி மறுப்பு திருமணங்களுக்கு எதிராக பேசியிருக்க முடியுமா?

ஹிந்து கோட்பில் மூலம் அம்பேத்கர் முன் மொழிந்த உரிமைகளுல் ஓர் முக்கியமான உரிமை பெண்கள் தாங்கள் விரும்பிய துணையை தேர்ந்தெடுக்கலாம் என்பதுதான், அவ்வரைவுக்கு ஆதரவு கிடைக்காமல் பதவியையே துறந்தார் அம்பேத்கர். சாதி மறுப்பு திருமணத்தை எதிர்ப்பதென்பது அரசியல் சாசனம் அளித்திருக்கும் உரிமைக்கெதிராகப் பேசுவதென்பதாகும்.

பண்டைய தாய்வழிச் சமூகம் சிதைந்து தந்தைவழி ஆணாதிக்க சமூகம் மோலோங்கியபோது நிலப்பிரபுத்துவ அமைப்புக்கேற்றவாறு உருவாக்கப்பட்ட சட்டங்கள் பெரும்பாலும் பெண்ணை அடக்குவதன் மூலம் ஒரு சாதியை, சமூகத்தை, இனக்குழுவை, இனத்தை அடக்கி ஆள திட்டமிட்டது. தங்களின் அரசியல் ஆதாயங்களுக்காக இன்றும் அது பல சாதிக் கட்சிகளால் பின்பற்றப்படுகிறது.

ஊழல் செய்வதில்கூட பல நவீனங்களை உள்வாங்கிக்கொண்ட ஆதிக்க சாதி அரசியல் கட்சிகள் சாதி விசயத்தில் மட்டும் இன்னும் ஆண்டானைப்போல நடந்து கொள்வது பிற்போக்குத்தனமானது, வன்மையாக கண்டிக்கத்தக்கது.

டிவிட்டர், முக நூல் போன்ற இணையதளங்களில் வைக்கபடும் கருத்திற்கு பாய்ந்து வந்து கைது செய்யும் வல்லமை படைத்த அரசுகள் வெளிப்படையாக இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கெதிராக, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யத்தக்க கருத்துக்களைப் பேசிவரும் காடு வெட்டி குரு, பா.ம.க நிறுவனர் இராமதாஸ், கொங்கு வேளாளர் பேரவை மணிகண்டன், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், பழ. கருப்பையா போன்ற சாதியக் கட்சிகள், சாதிய பற்றாளர்களை ஏன் இந்த அரசு இன்னும் கைது செய்யவில்லை.

சாதி வெறியில் வீடுகளை எரிப்பது, சூரையாடுவது போன்ற வன்கொடுமைகளை திரைப்படங்களில் மட்டுமே நான் பார்த்திருக்கிறேன். சமூக உணர்வு ஏற்பட்ட பின்னர் தான் இத்தகைய கொடூரங்களுக்குப் பின் இருக்கும் சமூக, பொருளாதார, அரசியல் காரணிகள் விளங்கியது.

மீசையை முறுக்கி, தோளை விடைத்துக் கொண்டு சாதிக் கொடுமைக்கெதிராக பொங்கு எழுந்த அந்த ‘ஆண் கதாநாயக வீரர்கள்’ எவரேனும் இந்த ஆதிக்க சாதி வெறியாட்டத்திற்கெஹ்டிராக ஒரு கண்டன அறிக்கையையாவது வெளியிட்டிருக்கிறார்களா? ‘தாய் குலம், தங்கைக் குலம்’ இப்படி ஒடுக்கப்படுவதை வேடிக்கப் பார்க்கும் இவர்களில் சிலர் தமிழ், தமிழ் தேசியம் என்றால் மட்டும் களத்தில் இறங்குகிறார்கள். இவர்களைப் பொறுத்தவரை ‘தமிழர்’ என்றால் வெறும் ஆண்கள் மட்டும்தான் போலும்.

சின்மயி விவகாரத்தில் ஒரு பேட்டியில், உரையாடலின் ஒரு தொடர்ச்சியாக அவரது தாயிடம் அப்படியே உங்கள் மகளைப் ஆபாசப் பாடல் பாடுவதையும் நிறுத்தச் சொல்லுங்கள் என்றேன். அதைப் பிடித்துக் கொண்டு குஷ்புவிடம் சின்மயி முறையிட, இப்படிப்பட்ட பிற்போக்குத்தனமான பெண்களும் இந்த காலத்தில் இருக்கிறார்களா? அவருக்கு ஒரு கேக்கைப் பரிசளித்து தூக்கத்திலிருந்து தட்டியெழுப்ப வேண்டும் என்றார். இந்த பெண் உரிமை பாதுகாவலர்கள் சாதி மறுப்பு திருமண எதிர்ப்பு என்பதில் அடிப்படையில் ஒடுக்கப்படுவது பெண்ணின் உரிமை என்பதை அறியவில்லையா? கூடுதலாக அதைக் காரணமாக வைத்து சாதிய ஆதிக்கப் போக்கில் தலித் கிராமங்களில் நிகழ்த்தப்பட்டிருக்கும் சாதி வெறியாட்டம் குறித்து இவர்கள் ஏதாவது கண்டன அறிக்கைகளை வெளியிட்டிருக்கிறார்களா?

இந்த சினிமாக்காரர்கள் சிலரின் கபட நாடகங்களையும், ஆணாதிக்க மனப்பான்மையும் தெரியாமல் உழைக்கும் வர்க்கமானது மீண்டும் மீண்டும் இவர்களை ஆட்சி அதிகாரத்தில் அமர்த்துகிறது. ஆட்சிக்கு வந்த பின்னர் அவர்கள் பெண் விடுதலை பற்றியும் கவலைப்படுவதில்லை, சமூக விடுதலைப் பற்றியும் கவலைப்படுவதில்லை.

ஆக தேர்தல் அரசியலில் பங்கெடுக்கும் இந்த ஆதிக்க சாதி, இடைநிலை சாதிக் கட்சிகளில் பெண் உரிமை, பெண் விடுதலைச் சிந்தனை இவைகளைச் சரியாகப் புரிந்து கொண்ட தலைமைகள் இருக்கின்றனவா என்பதே இப்போது இந்த நிகழ்வு நம் முன் வைக்கும் மிகப் பெரிய கேள்வி.

பொதுவாக அரசியல், சாதி, இன உணர்வு, மொழி உணர்வு என்று எல்லாவற்றிலும் ஆதிக்கம் செலுத்தம் நலன் ஆண் நலனே. இங்கு கூடியிருக்கும் தோழர்கள், தலித் அமைப்புகள், புரட்சிகர அமைப்புகள் இந்த ஆணாதிக்க அரசியலை விடுத்து பெண் உரிமையை நிலைநாட்டுவதின் மூலம் சாதி ஒழிப்பை மேற்கொள்வதின் அவசியத்தை உணர்ந்தவர்கள் என்று நம்புகிறேன்.

பெண் விடுதலையும், சாதி ஒழிப்பும் பின்னிப் பிணைந்தவை – உழைக்கும் மக்களை ஒன்றிணைப்போம், பெண் உரிமைகளைக் காக்கும் அறிவூட்டுவோம்..

சாதி-வர்க்க-பாலின வேறுபாடுகளைக் களைய ஒன்றுபட்டு போராடுவோம்.

30.11.2012 அன்று சென்னை மெரியல் ஹால் அருகில் தர்மபுரி தலித் கிராமங்கள் மீதான திட்டமிட்ட காட்டு மிராண்டித் தாக்குதலுக்கு எதிராக சாதி ஆதிக்க எதிர்ப்பு கூட்டியக்கம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் ஆற்றிய உரை (சறிய திருத்தங்களுடன்)

தொடர் உண்ணாநிலை அறப்போராட்டம்

நத்தம் காலனி, அண்ணாநகர், கொண்டம்பட்டி கிராம தலித் மக்கள் மீதான தாக்குதலுக்கு முறையான நீதியும், நிவாரணமும் வழங்க வலியுறுத்தி அந்த கிராம மக்கல் தொடர் உண்ணாநிலை அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஆதிக்க சாதி வெறி தாக்குதல்களையும், கொள்ளைகளையும் ஜெ தலைமையிலான தமிழக அரசு இதுவரை கண்டிக்கவில்லை, எந்த அமைச்சரும் இதுவரை மக்களை சந்தித்து ஆறுதல் கூறவும் இல்லை. நிவாரணக் குழு கூட அமைக்கப்பட்டதாக தெரியவில்லை.

அரசு மௌனம் காத்துவரும் வேளையில் தொடர் உண்ணாநிலை போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அதில் பங்கு கொள்வது ஒவ்வொரு தலித் இயக்கங்கள், முற்போக்கு இயக்கங்கள், புரட்சிகர அமைப்புகள், கட்சிகள் மற்றும் சமூக அர்வலர்களின் கடமை.

ஒவ்வொரு அமைப்பின் சார்பாகவும், ஜனநாயக சக்திகளாகவும் தினம் தினம் நூற்றுக் கணக்கானோர் இந்த தொடர் உண்ணாநிலை அறப்போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு சாதி ஆதிக்க எதிர்ப்பு கூட்டியக்கம் கேட்டுக்கொள்கிறது.

அம்மக்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கை இணைக்கப்பட்டுள்ளது.

 

image001

image002

சாதி ஆதிக்க எதிர்ப்பு கூட்டியக்கம் நடத்தும் ஆர்பாட்டம்

கூட்டியக்கத்தில் இணைந்துள்ளவர்கள் பட்டியலில்:

மாற்றத்திற்கான செய்தியாளர்கள், சென்னை

அ. வெற்றிவேல், சவுதி அரேபியா

திருத்தம்: கொற்றவை, மாசெஸ் (Movement Against Sexual Exploitation and Sexism)

500 Dalit Homes Burnt… And A News Blip – Tehelka.com

500 Dalit Homes Burnt… And A News BlipA love marriage. A suicide. And three ravaged villages. Imran Khan reports on a deadly reprisal against Dalits in Tamil Nadu that should have made it to national news

 • K Nagaraj

 • Kodakaari

 • Santosh and Suguna

 • Selvam, Paulina and their three children

 • Vasantha

 • Subramani and Vannila

 • Sathya and Panener

 • Vanneela

 • K Nagaraj

 • Kodakaari

 

THE AFTERMATH of the caste violence in Dharmapuri district of northern Tamil Nadu has rendered thousands of Dalits homeless and living in constant fear of another possible attack. On 7 November, a mob of 2,500 backward-caste Vanniyars had burnt and looted around 500 houses of Dalits, claiming to avenge the death of a Vanniyar who committed suicide after his daughter married a Dalit. Adding to the fear is a statement by Pattali Makkal Katchi (PMK) MLA Kaduvetti Guru, who heads the Vanniyar Sangam, forbidding inter-caste marriages. Locals and even the police officials posted in the area say the attack was premeditated and done with the connivance of pro-Vanniyar sections of the police and cadres of the PMK.

Between 5 pm and 10 pm on 7 November, every single house of the three hamlets of Nathamkottai, Kondampatti and Annanagar was burnt down. “Around 4:30 pm, the police started doing the rounds, asking us to run for our lives as a mob of Vanniyars was on its way to attack us,” says Paulina, 30, a Dalit Christian and mother of three, who ran to the nearby fields to save herself, along with other women, children and the elderly. There were few men in the villages at the time as most of them work as labourers in the construction sector in Bengaluru and Coimbatore, or in the garment-manufacturing sweatshops in Tirupur. Now, Paulina stays in a temporary community shelter set up a stone’s throw away from the charred remains of her oneroom house. “They even took away the cash and jewellery we had left behind,” she adds.

Madiwayan, 36, works as a scrap-dealer in Bengaluru and was not in the village at the time of the attack. His parents were hiding in the nearby fields when the irate mob arrived. “It took me over a decade to save Rs 24 lakh, which I spent on building my house. They burnt it to the ground and also looted Rs 2 lakh that I had kept to buy some land nearby,” he says.

Usha, wife of Periyaswamy, a cook in the local government hospital, says the police was unable to stop the mob. “The police came back only around 1 am and announced over the loudspeakers that those who had fled the village should come back.” The women returned the same night, followed by the children and the elderly the next morning.

The genesis of the recent violence is traced to the marriage of a Dalit man, Ilavarasan, 23, from Nathamkottai, with a Vanniyar woman, Divya, 20. As Divya’s father, 48-year-old R Nagarajan of Sallinkottai village, disapproved of their relationship, the couple had got married in secret a month ago. Nagarajan asked his daughter to return home, but she refused. Then, a meeting of the Vanniyar community was held, where it was decided that Divya must return to her father’s house. When she did not relent despite the community’s pressure, her father allegedly felt humiliated and committed suicide on 6 November.

The Dalits of the three hamlets attacked by the Vanniyar mob allege that the father’s suicide was used as a pretext to whip up caste sentiments and fuel anger over inter-caste marriages. “There are more than seven inter-caste couples in our village. My wife Radha is a Vanniyar. We haven’t seen any violence in the 12 years of our marriage. The Vanniyars are just angry that we do not work in their fields for meagre wages,” says NC Armugham, 36, who runs a grocery store in Bengaluru. Agrees Palaaiswamy, 40, who works as a newspaper vendor in Bengaluru. “Even a month after the couple had eloped, Nagarajan did not seem particularly upset,” he says. “We suspect his community must have pressured him to take this extreme step.”

The attack has left the Dalits of the three hamlets economically devastated. A fact-finding team of People’s Watch, a Chennai-based NGO, which visited the area on 11-12 November along with the state representative of the National Commission for Protection of Child Rights for RTE in Tamil Nadu, estimates the total economic loss caused by the attack to be around Rs 12 crore. According to this report, 215 families were affected in Nathamkottai, 152 in Kondampatti and 36 in Annanagar. The Jayalalitha government has offered Rs 50,000 as compensation to the victims.

“Violence of this kind would not have happened without the active support of the police,” says Henri Tiphagne, Executive Director of People’s Watch. “We found that the Vanniyars used more than 150 petrol bombs. It looks like a planned attack, instigated by the PMK, though Vanniyars from other parties also participated in it.” So far, the police has arrested 92 Vanniyars and filed cases against 218 more.

‘It is unbelievable that the police had no clue when 2,500 Vanniyars were being mobilised for the attack’Shakthi
President, Nathanamkottai Panchayat

PMK State Council Member Senthil denies any party hand in the violence. “Our party has worked for the upliftment of Dalits and it played no role in the incident,” he says. “Our position on inter-caste love marriages is that boys and girls less than 20 years old should not be allowed to get married as they cannot support themselves independently. Most end up getting divorced within six months. We are also campaigning for raising the marriageable age for girls to 21,” he adds. At best, this is an absurd argument. Moreover, in the case of Divya and Ilavarasan, neither was below 20. It is as if all the violence could be justified on the ground that Divya missed the PMK cut-off by a year.

ACCORDING TO the 2011 National Crime Records Bureau (NCRB) report, Tamil Nadu ranks eighth among the states in the number of attacks on Dalits, with more than 1,400 reported incidents. A lot of this violence is rooted in the conflict between the backward castes and the Dalits. Though categorised as backward caste, the Vanniyars have traditionally been landholders who employed Dalits to work in their fields. In recent times, however, the Dalits have been migrating to the cities to work as daily wage labourers and their economic condition has improved slightly. Tiphagne says this newfound mobility of the Dalits has not gone down well with the Vanniyars, and this anger fuels violence.

Abdul Rashid Khan lost his father in the Pathribal encounter Abdul Rashid Khan lost his father in the Pathribal encounter Abdul Rashid Khan lost his father in the Pathribal encounter
Mob fury The Vanniyars left a trail of destruction at Nathamkottai and two other Dalit hamlets

“Notably, this violence has occurred in hamlets where the Left movement once used to have a strong presence. In fact, Dharmapuri district was once the headquarters of the Naxalite movement in Tamil Nadu,” says Dalit intellectual Anand Teltumbde. “It is revealing that with the Naxalite movement on the wane, casteism has raised its ugly head. Vanniyars and Dalits are not very different in terms of economic status, but the fact that they have clashed violently many times shows the continuing power of the caste system.”

According to Thol Thirumavalavan, president of the Dalit party Viduthalai Chiruthaigal Katchi (VCK), the PMK orchestrated the riots in Dharmapuri to check the “economic rise of the Dalits” and counter “its own declining popularity among the Vanniyars”.

Regarding the connivance of the local police, Dharmapuri SP Asra Garg told TEHELKA: “Based on initial inquiries, three officers posted in the area — Inspector V Jegannathan, Sub-Inspector Perumal and Head Constable Singaravelu — were found guilty of dereliction of duty and have been placed under suspension.” Jegannathan, in charge of Kaaramangalam police station (Nathamkottai comes under this jurisdiction), was earlier convicted in a case dating back to 1992, in which more than 100 people were injured and at least 18 women reportedly raped in Vachatti, a tribal hamlet in Dharmapuri district. Jegannathan was among 268 officials from the forest, revenue and police departments who had gone on a rampage in the garb of locating illegally felled sandalwood. In September 2011, a local court convicted 215 of them, including Jegannathan, who has challenged the court’s order in the Madras High Court.

“Despite the simmering tension in the area, the local police failed to deploy adequate personnel for our protection. It is unbelievable that the police had no clue when 2,500 Vanniyars were being mobilised for the attack. The mob included people from villages 20 km away. They came with 150 litres of petrol and 200 litres of kerosene in mini-trucks. They also cut down trees and blocked the road to prevent fire tenders from reaching on time,” says Shakthi, president of the Nathamkottai Gram Panchayat.

source: http://tehelka.com/story_main54.asp?filename=Ne011212DALIT.asp

Imran Khan is a Senior Correspondent with Tehelka.
imran@tehelka.com

ஆர்பாட்ட தேதி அறிவிப்பு

தர்மபுரி தலித் கிராமங்கள் மீதான ஆதிக்க சாதி வெறியாட்டத்திற்கு எதிராக சாதி ஆதிக்க எதிர்ப்பு கூட்டியக்கம் நடத்தும் ஆர்பாட்டம்:

தர்மபுரி தலித் கிராமங்கள் மீதான ஆதிக்க சாதி வெறியாட்டத்திற்கு எதிராக சாதி ஆதிக்க எதிர்ப்பு கூட்டியக்கம் நடத்தும் ஆர்பாட்டம்:

நாள்: நவம்பர் 30,2012

இடம்: மெமோரியல் ஹால்

நேரம்: மாலை 4 முதல் 6 மணி

அனைத்து உழைக்கும் மக்களே! சாதி மறுப்பாளர்களே! சாதி வெறியாட்டத்திற்கு எதிராக அணி திரள்வோம்.

 

தர்மபுரி தலித் கிராமங்கள் மீதான ஆதிக்க சாதி வெறியாட்டத்திற்கு எதிராக அணிதிரள்வோம் !

saek/TN/02/2012

தர்மபுரி தலித் கிராமங்கள் மீதான ஆதிக்க சாதி வெறியாட்டத்திற்கு எதிராக அணிதிரள்வோம் !

*  தமிழக அரசே!

 • நத்தம், கொண்டம்பட்டி, அண்ணாநகர் தலித் கிராமங்கள் மீதான தாக்குதலுக்கு காரணமான சாதி வெறியர்களின் சொத்துக்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக வழங்கு.
 • இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக சாதி மறுப்புத் திருமணத்தை எதிர்க்கும், சாதி வெறியைத் தூண்டும் பாட்டாளி மக்கள் கட்சி, கொங்கு வேளாளர் பேரவை, மூவேந்தர் முன்னேற்றக் கழகம் போன்ற கட்சிகளை, அமைப்புகளை தடை செய்.

*  தமிழக மக்களே!

 • அரசின் ஆதிக்க சாதி கூட்டிற்கு எதிராகவும் தர்மபுரி சாதி வெறி ஆட்டத்திற்கு துணை நின்ற உளவுத் துறை – காவல் துறை நடவடிக்கைகளுக்கு எதிராகவும் அணி திரள்வோம்.
 • அனைத்து உழைக்கும் மக்களே! சாதி மறுப்பாளர்களே! சாதி வெறியாட்டத்திற்கு எதிராக அணி திரள்வோம்

இவண்,

சாதி ஆதிக்க எதிர்ப்பு கூட்டியக்கம், தமிழ்நாடு

தொடர்புக்கு – jmacd.tamilnadu@gmail.com

கி. பழனி – மக்கள் சனநாயக குடியரசு கட்சி – 9176264717, ஒருங்கிணைப்பாளர்

ஒருங்கிணைப்பாளர்கள் குழு:

1.     கி. பழனி – மக்கள் சனநாயக குடியரசு கட்சி – 9176264717

2.     தி. மோகன் – 984069511

3.     கோ. நீலமேகம் – புரட்சியாளர் அம்பேத்கார் விழிப்புணர்வு பாசறை – 9710015123

4.     கொற்றவை – மாசெஸ் – kotravaiwrites@gmail.com

5.     அரங்க குணசேகரன் – தமிழக மக்கள் புரட்சி கழகம் – 9047521117

6.     பி.சி சண்முகசுந்தரம் – சி.பி.ஐ (எம்.எல்) – 971077547

7.     சாலமன் – இந்திய மக்கள் முன்னணி – 9444539376

தொடர்புடைய சுட்டிகள்

http://www.thehindu.com/news/states/tamil-nadu/dharmapuri-incident-serious-hc/article4082173.ece

http://articles.timesofindia.indiatimes.com/2012-11-08/coimbatore/34993610_1_dalit-boy-dalit-houses-caste-violence

http://thealternative.in/inclusivity/dharmpuris-caset-blackened-walls/

http://newindianexpress.com/states/tamil_nadu/article1342654.ece

http://www.firstpost.com/politics/dharmapuri-violence-why-dalits-are-unsafe-in-dravidian-tamil-nadu-522135.html

http://tamil.oneindia.in/news/2012/11/12/tamilnadu-dharmapuri-inspector-suspended-making-night-rounds-164561.html

http://amarx.org/?p=666

பதிவிட்டவர்: கொற்றவை

சாதி ஆதிக்க எதிர்ப்பு கூட்டியக்கம், தமிழ் நாடு


Image

saek/TN/01/2012

தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாகவே நடைபெற்று வரும் தலித் மக்கள் மீதான ஆதிக்க சாதிய வெறியாட்டத்தின் பகுதியாக அண்மையில் நடைபெற்ற தருமபுரி மாவட்டம் – நத்தம், கொண்டம்பட்டி, அண்ணாநகர் தலித் கிராமம் மீதான திட்டமிட்ட காட்டு மிராண்டித் தாக்குதலுக்கு எதிராக தொடர் இயக்கத்தை தமிழக அளவில் மேற்கொள்ள வேண்டியுள்ளது. எனவே, சாதி ஒழிப்பு போராட்டத்தில் முன் நிற்கும் அனைத்து சக்திகளும் ஓரணியில் திரள வேண்டிய அவசியமுள்ளது. இதையொட்டி பரந்த கூட்டமைப்பை உறுவாக்குவதற்கான ஒரு ஆலோசனைக் கூட்டம் 18.11.2012 அன்று தோழர் கோவை ஈஸ்வரன் தலைமையில் சென்னையில் நடந்தது. அதில் இருபத்தி ஐந்திற்கும் மேற்பட்ட அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் இறுதியில் இந்த கூட்டு இயக்கத்திற்கு ’சாதி ஆதிக்க எதிர்ப்பு கூட்டியக்கம்’, தமிழ்நாடு என்று ஒருமித்த ஆதரவோடு பெயர் முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டமைப்பிற்கான ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்களை தேர்வு செய்யும்படி தோழர்கள், தோழர் கோவை ஈஸ்வரனை பணிந்தனர். தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர் குழு உறுப்பினர்களின் பெயர்கள் பின்வருமாறு:

 1.     கி. பழனி மக்கள் சனநாயக குடியரசு கட்சி (ஒருங்கிணைப்பாளர்)

2.     தி. மோகன்

3.     கோ. நீலமேகம் புரட்சியாளர் அம்பேத்கார் விழிப்புணர்வு பாசறை

4.     கொற்றவை மாசெஸ்

5.     அரங்க குணசேகரன் தமிழக மக்கள் புரட்சி கழகம்

6.     பி.சி சண்முகசுந்தரம் சி.பி.ஐ (எம்.எல்)

7.     சாலமன் இந்திய மக்கள் முன்னணி

தர்மபுரி சாதி வெறியாட்டத்திற்கு எதிரான போராட்டங்களை சென்னை மற்றும் தர்மபுரியில் முன்னெடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும், தொடர் சாதி ஒழிப்பு பணிகளை முன்னெடுப்பதற்கான ஒரு கூட்டமைப்பாகநடைமுறை ஆய்வுகளுக்குட்பட்டு இக்கூட்டு இயக்கத்தை கொண்டுசெல்லுதல் என்றும் முடிவு செய்யப்பட்டது. ஆதிக்க சாதி வெறியாட்டத்திற்கு எதிராக நடக்கவிருக்கும் ஆர்பாட்டங்களில் வைக்கப்பட வேண்டிய முழக்கங்கள், கோரிக்கைகள் முடிவு செய்யப்பட்டது.  கூட்டியக்க ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள் 19.11.2012 மாலை 4 மணிக்கு கூடி ஆர்பாட்ட நிகழ்வுக்கான திட்டமிடுதல்களை தொடர்வது என்று முடிவு செய்யப்பட்டு அன்றைய கூட்டம் நிறைவு பெற்றது.

அனைத்து உழைக்கும் மக்கள், தலித் அமைப்புகள், புரட்சிகர அமைப்புகள், சாதி மறுப்பாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் இக்கூட்டியக்கத்தில் இணையலாம்.

தொடர்புக்கு saek.tamilnadu@gmail.com

 

பதிவிட்டவர்: கொற்றவை

saek/TN/01/2012